புதிய காவல்துறை ஆணையரை நியமிக்கும் வரை டத்தோ ஜௌதே டிகுன் சபா மாநில பதில் காவல்துறை ஆணையராக பணியாற்றுவார்

சபா மாநில காவல்துறை ஆணையர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா, நாளை மார்ச் 31 முதல் கட்டாய ஓய்வு பெறுவதன் காரணாமாக , விரைவில் புதிய சபா மாநில காவல்துறை ஆணையர் நியமிக்கப்படுவார் என்றும், அதுவரை தற்போது சபா மாநில காவல்துறை துணை ஆணையர் டத்தோ ஜௌதே டிகுன், பதில் காவல்துறை ஆணையராக பணியாற்றுவார் என்றும் கூறப்படுகிறது.

இன்று வியாழக்கிழமை (மார்ச் 30) கெப்பாயனில் உள்ள மாநில காவல்துறை தலைமையகத்தில் இத்ரிஸ் மற்றும் ஜௌதே ஆகியோருக்கு இடையேயான கடமைகளை ஒப்படைப்பு நிகழ்வில், தேசிய போலீஸ் படைத்த தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கலந்து கொண்டார்.

அந்நிகழ்வில் தேசிய போலீஸ் படைத்த தலைவர் ஆற்றிய உரையில், ‘ஜௌதே தனது அறிவாற்றல் மற்றும் காவல்துறையில் அனுபவம் உள்ளதால், சபா மாநில பதில் காவல்துறை ஆணையராகப் பணிகளைச் செய்ய முடியும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here