ஜோகூரிலுள்ள ரமலான் பசாரில் பாலிஸ்டிரீன் மற்றும் செய்தித்தாள் பயன்பாட்டுக்குத் தடை

ஜோகூர் பாரு, மார்ச் 30 :

ஜோகூர் பாரு மாநகர சபை (MBJB) அதிகார வரம்பிற்குட்பட்ட, இந்த ஆண்டுக்கான ரமலான் பசார்களில் வணிகர்கள் உணவுப் பொதிகளுக்கு பாலிஸ்டிரீன் மற்றும் செய்தித்தாள்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜோகூர் பாரு மேயர் டத்தோ நூராசாம் ஒஸ்மான் இதுபற்றிக் கூறுகையில், வணிகர்கள் தங்கள் ஸ்டால்களை நிர்வகிக்கும் போது முகக்கவசம், ஏப்ரான் மற்றும் கையுறைகளை அணிவது கட்டாயமாகும் என்றார்.

ரம்லான் பசாரில் உணவுக்காக பாலிஸ்டிரீன் கொள்கலன்கள் மற்றும் செய்தித்தாள்களை பயன்படுத்த வணிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த உணவு கொள்கலன்கள் அல்லது டிபன் கேரியர்களை கொண்டு வருமாறும் அவர் அறிவுறுத்தினார்.

புதன்கிழமை (மார்ச் 30) ​​நடைபெற்ற MBJB கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய நூராசம், “குப்பைகளின் அளவைக் குறைக்கவும் அதே நேரத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் இந்த நடைமுறை உதவும்” என்று கூறினார்.

இந்த ஆண்டு 44 ரமலான் மற்றும் நான்கு ஹரி ராயா ஐடில்பித்ரி பஜார்களுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

இஸ்லாமியர்களுக்கான நோன்பு மாதம் ஏப்ரல் 2ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here