அயோப் கானின் பெயரில் உள்ள டிக்டாக் கணக்கு போலியானது -போலீஸ்

“@datukayub8 என்ற பெயருடன் கூடிய டிக் டாக் (TikTok) கணக்கு” புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர், டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சைக்கு சொந்தமானது இல்லை என்று மலேசிய காவல்துறை (PDRM) தெரிவித்துள்ளது.

குறித்த டிக் டாக் கணக்கு போலியானது என்றும் அக்கணக்கின் பயனர் பின்தொடர்பவர்களை ஈர்க்க அயோப் கானின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தியதாக தேசிய காவல்துறை நேற்றிரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“பொதுமக்கள் பொய்யான கணக்கை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், துல்லியமான மற்றும் உண்மையான தகவல்களைப் பெற அதிகாரப்பூர்வ ஆதாரங்களை எப்போதும் சரி பார்க்கவும்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here