நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 31) முதல் கனமழையைத் தொடர்ந்து, சபாவின் நபவானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 51 குடும்பங்களைச் சேர்ந்த 187 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் நள்ளிரவு 12.30 மணியளவில், SIB சலாரோம் பாரு தேவாலயத்தில் உள்ள நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டதாக, சபா மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகம் இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 1) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நபவான் என்பது கோத்தா கினாபாலுவிற்கு தெற்கே 195 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சபாவின் உள் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும்.
இதற்கிடையில், நபவானில் உள்ள ஜாலான் பாமுந்தேரியான்-கபு பாரு என்ற ஒரே ஒரு சாலை மட்டுமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், அப்பாதையில் எந்த வாகனமும் செல்ல முடியாத நிலையில் உள்ளதாகவும், தற்போதைக்கு மாற்று சாலை எதையும் பயன்படுத்த முடியாது என்றும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.