உயிரியல் பூங்காவில் உள்ள இரு பாண்டா குட்டிகள் மே மாதம் சீனாவுக்கு அனுப்பப்படும்

உயிரியல் பூங்காவில் உள்ள அனைவரும் கவரும் பாண்டா குட்டிகளான யி யி மற்றும் ஷெங் யி வரும் மே மாதம் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பல ஆண்டுகளாக இந்த இரண்டு பாண்டா குட்டிகளையும் அனுப்பும் முயற்சி தாமதமாகி வந்தநிலையில், அடுத்த ஆறு வாரங்களில் அது சீனவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று தேசிய உயிரியல் பூங்காவின் துணை இயக்குனர், ரோஸ்லி @ ரஹ்மட் அஹ்மட் லானா கூறினார்.

“இருப்பினும், சரியான அனுப்பும் தேதி இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் அது மே மாதத்தின் மத்தியில் இருக்கலாம், பாண்டா குட்டிகள் நேரடியாக செங்டுவுக்கு அனுப்பப்படும்” என்று ரோஸ்லி மேலும் கூறினார்.

மலேசியா மற்றும் சீனா இராஜதந்திர உறவுகளின் 40 வது ஆண்டு நிறைவுடன் இணைந்து , Xing Xing மற்றும் Liang Liang என்ற ஒரு பாண்டா ஜோடியை மலேசியா 10 ஆண்டுகளுக்கு கடனாக கடந்த 2014 ஆம் ஆண்டு சீனாவிடமிருந்து வாங்கியது.

இன்றுவரை, Xing Xing மற்றும் Liang Liang என மறுபெயரிடப்பட்ட பாண்டா ஜோடி, இதுவரை மூன்று குட்டிகளை (நுவான் நுவான் –ஆகஸ்ட் 18, 2015, யி யி-  ஜனவரி 14, 2018 மற்றும் ஷெங் யி-மே 30, 2021) ஈன்றுள்ளது. அதில் ஒன்று (நுவான் நுவான்) கடந்த 2017ல்  சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு பாண்டா குட்டியும் 24 மாதங்கள் நிறைவடைந்து நான்கு வயதுக்கு மிகாமல் இருக்கும் போது சீனாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here