ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்சனையை கையாள சிறப்புக் குழு அமைக்க அமைச்சரவை ஒப்புதல் – டாக்டர் ஜாலிஹா

ஒப்பந்த மருத்துவர்களின் பிரச்சினையைக் கையாள உயர்மட்டக் குழுவை அமைக்க இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அமைச்சரவை ஒப்புக்கொண்டது என்று, சுகாதார அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறினார்.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ முகமட் சுகி அலி உட்பட பல அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம் பெறுவார்கள் என்று, இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் மூலம் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஏப்ரல் 3 முதல் 5 வரை ஒப்பந்த மருத்துவர்களின் வேலைநிறுத்தம் பற்றிய வதந்திகள் வெளிவந்தன, மேலும் DoctorsMalaysia எனும் பெயரிலுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் நாடு முழுவதும் உள்ள ஒப்பந்த மருத்துவர்களை வேலைநிறுத்தத்தில் சேருமாறு அல்லது ஏப்ரல் 1 ஆம் தேதி ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்துகிறது.

வேலைநிறுத்தம் குறித்து சுகாதார அமைச்சகத்திடம் (MOH) மேலதிக தகவல்கள் எதுவும் இல்லை, இருப்பினும், மருத்துவத் தொழில் அல்லது வேறு எந்த தொழில்முறைத் திட்டமும் தொடர்பான பிரச்சனைகளுக்கு வேலைநிறுத்தம் சிறந்த தீர்வாக இருக்காது என்று டாக்டர் ஜாலிஹா கூறினார்.

“மாறாக, இந்த நடவடிக்கை கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும், ஏனெனில் சுகாதார சேவை என்பது மனித உயிர்கள் மற்றும் மக்களின் நல்வாழ்வை உள்ளடக்கிய முக்கியமான சேவையாகும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here