சவூதி அரேபிய அரசாங்கத்தின் அழைப்பிற்கு மீண்டும் நன்றி தெரிவிப்பதாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) இரவு வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, பிரதமர் மற்றும் அவரது தூதுக்குழுவினருடன் கடந்த மார்ச் 22 முதல் 24 வரை சவூதி அரேபியாவிற்கு அவர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன் மூலம் மலேசியா மற்றும் சவூதி அரேபியா இடையே வணிக, வங்கி மற்றும் இஸ்லாமிய விஷயங்கள் உட்பட இருதரப்பு உறவுகள் மிகவும் நன்றாக இருப்பதாக பிரதமர் அந்தப் பதிவில் பகிர்ந்து கொண்டார். மேலும் “இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளில் தொடர்ந்து வலுப்பெறும் என்றும், நமது மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும் நான் நம்புகிறேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சவூதி அரேபியா, 2022 ஆம் ஆண்டில் RM45.52 பில்லியன் (US$10.26 பில்லியன்) மொத்த இருவழி வர்த்தக அளவுடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும், மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடமாகவும் மற்றும் மிகப்பெரிய இறக்குமதியாளராகவும் இருக்கிறது.