திரெங்கானு ECRL திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 55.21 விழுக்காட்டை எட்டியுள்ளது

திரெங்கானுவில் கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் 55.21 சதவீதத்தை எட்டியுள்ளது என்று மலேசிய ரயில்வே இணைப்பு நிறுவனத்தின் (MRL) தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோஸ்ரீ டார்விஸ் அப்துல் ரசாக் தெரிவித்தார்.

திரெங்கானு மாநிலத்தில் 275 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தக் கட்டுமானப் பணிகள் 2026 டிசம்பரில் முழுமையாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இது ஜெர்தே, பண்டார் பெர்மைசூரி, கோலா திரெங்கானு மற்றும் கெமாசிக் ஆகிய ஆறு நிலையங்களை நிர்மாணிப்பதை உள்ளடக்கியது, அவை பயணிகள் நிலையங்களாக செயல்படும், அத்துடன் பயணிகள் மற்றும் சரக்கு நோக்கங்களுக்காக டுங்கூன் மற்றும் சுக்காய் ஆகிய நிலையங்களும் உள்ளடங்கும்.

மேலும் “கோத்தா பாரு, கிளாந்தான், போர்ட் கிள்ளாங், சிலாங்கூர் வரையிலான 665 கிலோமீட்டர் ECRL பாதைக்கான கட்டுமானப் பணிகள் 40.81 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதுடன், அவை முன்னேற்ற நிலையில் உள்ளன.

“கிளாந்தான், பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய மூன்று மாநிலங்களுடன் ஒப்பிடும்போது திரெங்கானுவில் உள்ள 275 கிலோமீட்டர் பாதை மிக நீளமானது” என்று அவர் நேற்று இரவு ECRL உடன் நடந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் பேசும்போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here