நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் (PAC) தலைவராக மஸ்ஜிட் தனா எம்பி டத்தோ மாஸ் ர்மியாத்தி சம்சுதின் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் உத்தரவுப் பத்திரத்தின்படி, குளுவாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் ஷு கியை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் துணைத் தலைவராகவும் பிரதமர் அறிவித்தார்.
டத்தோஸ்ரீ நோரெய்னி அகமட்டிற்குப் பிறகு PACக்கு தலைமை தாங்கும் இரண்டாவது பெண் மாஸ் எர்மியாத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவில் பொதுவாக ஆறு முதல் 12 உறுப்பினர்களை உள்ளடக்கியது, அவர்கள் தேர்வுக் குழுவால் பரிந்துரைக்கப்படுவார்கள்.
இந்த அமைப்பு பொது தணிக்கையின் கண்டுபிடிப்புகளை ஆராய்வதற்கான ஒரு நாடாளுமன்ற அமைப்பாகும். PAC அமைப்பு தேவை ஏற்படின் அமைச்சர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பிற அதிகாரிகளையும் குழுவின் விசாரணைக்கு அழைக்கலாம்.









