ரஹ்மா பண உதவியின் (STR) இரண்டாம் கட்டத் தொகை, ஏப்ரல் 5 முதல் பதிவு செய்யப்பட்ட பெறுநர்களின் கணக்குகளில் கட்டம் கட்டமாக நேரடியாக வரவு வைக்கப்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஹ்மா பண உதவியின் 2ஆம் கட்டத்திற்கான மொத்த தொகை RM1.26 பில்லியன் தொகையை உள்ளடக்கியது என்றும் இது B40 வகுப்பைச் சேர்ந்த 8.7 மில்லியன் பெறுநர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்று நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியது.
மேலும் புறநகர் பகுதியிலுள்ள ரஹ்மா பண உதவி பெறுநர்கள், வங்கிக் கணக்குகள் உள்ளவர்களோ அல்லது இல்லாதவர்களோ தகுதியுடைய அனைவரும் அதே தேதியில் இந்தக் உதவியைப் பெறுவார்கள்.
“ரஹ்மா பண உதவி பெறுநர்கள் அதே தேதியில் தங்கள் வங்கிக் கணக்குகளில் நிலுவையைச் சரிபார்க்கலாம் என்றும், வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் ஏப்ரல் 5 முதல் வங்கி சிம்பனன் நேஷனல் (BSN) கிளைகளில் அவர்களுக்கான பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அது மேலும் கூறியது.









