மூவார்: பாகோவில் உள்ள கம்போங் பாயா ரெடானில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தீப்பிடித்து இறந்த வயோதிப தம்பதி மற்றும் அவர்களது பேத்தியின் முக்கிய சந்தேக நபர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று காலை மூவார் நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்ட 48 வயதுடைய சந்தேகநபருக்கு நீதிபதி ஃபாடின் தலிலா காலிட் இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பித்ததாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
சந்தேக நபர் கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங்கில் அதிகாலை 1 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோர் யாசின் 82, அவரது மனைவி, அரா அப்துல் ஹமீத் 76, அவர்களது பேத்தி நோராத்ரியானா நோர் ஹசிம் 11 ஆகியோரின் மரணத்திற்குப் பிறகு ஒரு தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டது. மற்றொரு பாதிக்கப்பட்ட நோராசிமா முகமது ரதி 14, காயம் அடைந்து சுல்தானா பாத்திமா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்ட பின்னர் உயிரிழந்த மூன்று பேரின் மரணம் தொடர்பான குற்றவியல் ஆதாரங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் வழக்கு மறுவகைப்படுத்தப்பட்டது.










