நோன்புப்பெருநாளை முன்னிட்டு, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையே உள்ள தரை வழி நுழைவுப்பாதை வழியாக சுமார் இரண்டு மில்லியன் வாகனங்கள் ஜோகூருக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூரின் சுல்தான் இஸ்கண்டர் கட்டிடத்தில் உள்ள சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வளாகத்திலும், இஸ்கண்டர் புத்திரியில் உள்ள சுல்தான் அபு பக்கர் வளாகத்திலும் வழக்கத்திற்கு மாறாக நெரிசல் இருக்கும் என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர், டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
“ஜோகூரில் மொத்தம் 47 இடங்களில் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அதிகம் விபத்துகள் ஏற்படலாம் என நம்பப்படும் 27 இடங்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம்.
இதனைக் கருத்தில் கொண்டு “மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளை, குறிப்பாக விபத்து அதிகம் உள்ள இடங்களில் கண்காணிக்க 700 காவல்துறை அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பணியாளர்களை நியமிப்போம் என்று அவர் கூறினார்.















