நாட்டில் அரிசி மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்

அரிசி மாவு தயாரிப்பு மூலப்பொருளான உடைந்த அரிசியின் பற்றாக்குறையை உள்நாட்டு அரிசி மாவு உற்பத்தியாளர்கள் அனுபவித்து வருகின்றனர். மூலப்பொருட்களின் தட்டுப்பாடு நீடித்தால், உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று, மலேசியாவின் பீ ஹூன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர், டத்தோ ஆங் சோ டீங் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரிசி மாவின் இருப்பு அடுத்த இரண்டு வார உற்பத்திக்கு போதுமானது. இருப்பினும் அரிசி மாவுப் பொருள் தட்டுப்பாட்டைத் தடுக்க வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் உதவ வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.

அவரைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு உலகளாவிய விவசாய விளைச்சல் குறைந்ததால் காரணமாக, உடைந்த அரிசியின் விலை உயர்ந்துள்ளது, இதனால் போதுமான விநியோகத்தைப் பெறுவது அரிசி மாவு உற்பத்தியாளர்களுக்கு கடினமாக இருந்தது என்றார்.

மலேசியாவில் உடைந்த அரிசியை வழங்கும் முக்கிய நிறுவனமான Padiberas Nasional Bhd (Bernas) இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச விலை உயர்வு மற்றும் இலாபம் குறைந்ததால் உடைத்த அரிசியை இறக்குமதி செய்யவில்லை என்றார்.

அரிசி மாவு உற்பத்தியாளர்கள் மற்ற நாடுகளில் இருந்து நேரடியாக தரமான உடைந்த அரிசியைப் பெறுவதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் அவர்கள் பெர்னாஸ் வழியாக செல்ல வேண்டியிருந்தது, இதன் விளைவாக இறக்குமதிச் செலவுகள் அதிகரிக்கிறது என்றார்.

எனவே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், அவற்றின் உற்பத்தி செயல்முறைக்கு தேவையான மூலப்பொருட்களின் நிலையான விநியோகத்தை உறுதி செய்யவும் அரிசி மாவு உற்பத்தியாளர் சங்கம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here