நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மலேசியாவில் நடைபெற்ற அனைத்துலக நீச்சல் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். தமிழ் திரையுலகில் சாக்லேட் பாய் ஆக வலம் வந்தவர் நடிகர் மாதவன். ரன், அலைபாயுதே, ஜே ஜே, போன்ற ரொமாண்டிக் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் மாதவன், பின்னர் பாலிவுட் பக்கம் சென்று அங்கு 3 இடியட்ஸ் படத்தில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்த மாதவன், ராக்கெட்ரி படம் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார்.

தற்போது தமிழில் 2 படங்களை கைவசம் வைத்துள்ளார் மாதவன். அதில் ஒரு படத்தை மித்ரன் ஆர் ஜவஹர் இயக்குகிறார். இவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கியவர் ஆவார். அதேபோல் மாதவன் நடிக்கும் மற்றொரு படம் டெஸ்ட். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்க உள்ளார். இப்படத்தில் மாதவன் உடன் நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.