கோலாலம்பூர்: சமீபத்தில் பெட்ரோனாஸ் லோட்டஸ் அம்பாங்கிற்கு எதிரே உள்ள MRR2 இல் பட்டாசு வெடிக்கும் வீடியோ கிளிப்பில் காணப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணியளவில் 35 வயதுடைய லோரி ஓட்டுநரான அந்த நபர் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் பரூக் எஷாக் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், தனது நண்பருக்குச் சொந்தமான இடத்தில் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் பட்டாசுகளை வெடித்துள்ளார்.
குற்றப் பதிவுகள் எதுவும் இல்லாத அந்த நபர் புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெடிபொருள் சட்டம் மற்றும் பட்டாசு வெடித்ததற்காக சிறு குற்றச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஃபரூக் கூறினார்.









