மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எண்ணெய்க்கான ஒதுக்கீடு மாதாந்திர 60,000 டன்னாக இன்னும் உள்ளது என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகம் (KPDN) இன்று தெரிவித்துள்ளது.
மேலும் ஊடகங்களில் வெளியானது போல், தற்போதுள்ள ஒதுக்கீட்டை மாதத்திற்கு 40,000 டன்களாக குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அது தெளிவுபடுத்தியது.
இது தொடர்பில் உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்தின் பொதுச்செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசோப் கூறுகையில், மானிய விலையில் கிடைக்கும் சமையல் எண்ணெய்யின் 60,000 டன் ஒதுக்கீடு அதிகமாக உள்ளது என்ற கருத்துக்களை தமது அமைச்சகம் ஆராய்ந்து வருவதாகவும், சோதனையின் அடிப்படையில், பின்னர் மாதாந்திரம் 40,000 டன்னாகக் குறைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
2016 ஆம் ஆண்டு முதல் மலேசிய பாமாயில் வாரியத்திடம் இருந்து உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சகத்திற்கு மாதாந்திர மானிய விலையில் சமையல் எண்ணெய்க்கான ஒதுக்கீடு 60,000 டன் என்ற வகையில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.