நோன்புப்பெருநாள் காலத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் பழுதுபார்ப்பு பணிகள் ஏப்ரல் 18 முதல் மே 7 வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்று டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
நோன்புப்பெருநாள் கொண்டாட்டத்தின் போது சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும், சாலைப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக எடுக்கப்பட்ட முயற்சி என்று பொதுப்பணி அமைச்சர் கூறினார்.








