சூடானில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில், துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பான இந்த மோதலில் துணை இராணுவ தளபதி முகமட் ஹம்தான் தகலோ மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல்-பர்ஹன் இடையே சுமுக முடிவு ஏற்படவில்லை. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு மோதல் வெடித்தது.
இராணுவம், துணை ராணுவத்தினர் ஆங்காங்கே குழுக்கள் குழுக்களாக சண்டையிட்டு வருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல்நிலை நிலவருகிறது.
இந்த நிலையில், அங்கு தற்காலிகமாக 72 மணி நேரத்துக்கு சண்டையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவத்துக்கு எதிராக போராடி வரும் துணை இராணுவ படையினர் போர் நிறுத்ததுக்கு ஒத்துக்கொண்டுள்ளனர்.
நோன்புப்பெருநாள் கொண்டாடப்படுவதையொட்டி 3 நாட்களுக்கு போர் நிறுத்ததுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.









