கூட்டரசு பிரதேசமான கோலாலம்பூர் மற்றும் சரவாக் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று பிற்பகல் 5 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வானிலை பெர்லிஸ், ஜோகூர் மற்றும் கோலாலம்பூர் ஆகிய இடங்களிலும், கெடாவில் உள்ள குபாங் பாசு, கோத்தா ஸ்டார், போக்கோக் சேனா, பாடாங் தெராப், யான், பெந்தாங், சிக் மற்றும் பாலிங், உலு பேராக், பேராக், பெக்கான் மற்றும் ரோம்பின் சம்பந்தப்பட்ட இடங்களும் இந்த வானிலையை எதிர்நோக்குகின்றன.
“அதே வானிலையை சிலாங்கூரில், அதாவது கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் உலு லங்காட்) ஆகியவையும் நெகிரி செம்பிலானில் சிரம்பானிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று, இன்று வானிலை ஆய்வு மையம் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் “சரவாக்கில், ஸ்ரீ அமான், பெடோங் (பெத்தாங்), சரிகேய் (பாகன் மற்றும் ஜுலாவ்), சிபு (செலங்காவ்), முக்கா (தாரோ, மடு, தலாத் மற்றும் முகா), கபிட் (பாடால்) மற்றும் பிந்துலு (டாடாவ் மற்றும் பிந்துலு) ஆகிய இடங்களிழும் இந்த வானிலை எதிர்பார்க்கப்படுகிறது” என்று அது தெரிவித்துள்ளது.
“இந்த இடியுடன் கூடிய மழை எச்சரிக்கைகள் அதாவது குறுகிய கால எச்சரிக்கைகள் ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகும்” என்றும் கூறப்பட்டுள்ளது.









