இந்தோனேசியாவின் தென் சுமத்ராவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; மெட் மலேசியா அறிக்கை

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 4 மணியளவில் 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேற்கு மலேசியாவின் பல மாநிலங்களில் அதிர்வுகள் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சைபரட்டில் இருந்து வடமேற்கே 85 கிமீ தொலைவில் 49 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக மெட்மலேசியா இயக்குநர் ஜெனரல் ஹெல்மி அப்துல்லா தெரிவித்தார். மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை  என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம், மெட்மலேசியா, இந்தோனேசியாவின் தாரகனுக்கு வடக்கே 365 கிமீ தொலைவில் உள்ள சபாவில் பெலூரானில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறியது. மேலும் நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here