சிலாங்கூரில் இன்று மின்னலுடன் கூடிய கனமழை, பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்ப்பு -மலேசிய வானிலை ஆய்வு மையம்

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்று மின்னலுடன் கூடிய மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று அதிகாலை 1 மணி முதல் இந்த வானிலை தொடங்கியதாகவும், பேராக், பினாங்கு மற்றும் கெடா உள்ளிட்ட தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையைச் சுற்றியுள்ள பல பகுதிகளும் இவ்வானிலையை எதிர்கொள்வதாகவும் மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேமரன் ஹைலேண்ட், லிப்பிஸ், ரவூப், ஜெரான்துட் மற்றும் தெமெர்லோ, பகாங், குவா மூசாங், கிளாந்தான், காபிட் மற்றும் மிரி, சரவாக் போன்ற பகுதிகளிலும் இதே வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

மேலும் இடி, மின்னலுடன் கூடிய மழை மணிக்கு 20 மில்லிமீட்டருக்கும் அதிகமாக இருக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது,

மேலும் இந்த இடி, மின்னலுடன் கூடிய மழை முன்னறிவிப்பு ஒரு குறுகிய கால எச்சரிக்கை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here