இன்று வியாழக்கிழமை (ஏப்ரல் 27) அதிகாலையில் ஷா ஆலாமிலுள்ள ஒரு கார் பழுதுபார்க்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
செக்சன் 16ல் உள்ள ஜாலான் ஜெமுஜு 3ல் தீ விபத்து ஏற்பட்டதாக, ஷா ஆலாம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர், ராம்சே எம்போல் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“இரண்டு மாடி கட்டிடத்தில் தீப்பிடித்தது, பலியானவரின் உடல் படிக்கட்டுகளில் கண்டெடுக்கப்பட்டது,” என்று அவர் கூறினார். அத்தோடு பாதிக்கப்பட்டவரின் கை, கால்களில் தீக்காயங்கள் இருப்பதாகவும், கிள்ளானில் உள்ள தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
“தீ விபத்தில் கட்டடம் முழுமையாக அழிக்கப்பட்டது என்றும், தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு தடயவியல் குழு விசாரித்து வருகிறது என்றும், தீ விபத்தில் உயிரிழந்தவர் பாகிஸ்தானியர் என்றும் அறிய முடிவதாகவும் அவர் மேலும் கூறினார்.









