ஒரு கடையில் கொள்ளையடித்ததாக நம்பப்படும் இருவருக்கு போலீஸ் வலை வீச்சு

கடந்த பிப்ரவரி 26ம் தேதி, ஜாலான் ராஜா மொக்தார் 4, காப்பார் என்ற இடத்தில் உள்ள ஒரு கடையில் கொள்ளையடித்துவிட்டு, பணப்பெட்டியுடன் தப்பி ஓடிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பவம் நடந்த நாளான இரவு 11.48 மணிக்கு கடை உரிமையாளரிடம் இருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது, ஆனால் அந்த சம்பவத்தின் வீடியோ நேற்று சமூக ஊடகங்களில் வைரலானது என்று வடக்கு கிள்ளான் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் எஸ்.விஜயா ராவ் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில், இரவு 9.30 மணியளவில் கடை ஊழியர்கள் கடையை மூடுவதற்கு தயாராகி கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

“திடீரென்று மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து, கத்தி போன்ற ஆயுதம் ஏந்திய இருவர் கடைக்குள் புகுந்தனர், குறித்த சந்தேக நபர்கள் இருவரும் வளாகத்திற்குள் நுழைந்து பணம் செலுத்தும் கவுண்டரில் இருந்த பணப்பெட்டியையும், கடையின் கட்டண கவுன்டரில் இருந்த ஒரு ஊழியரின் கைத்தொலைபேசியையும் திருடிச் சென்றனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் போலீசார் இன்னும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கு முயற்சிகள் நடந்து வருவதாகவும் எஸ்.விஜயா ராவ் கூறினார்.

“இதனால் சம்பந்தப்பட்ட கடைக்கு RM2,000க்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டிருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் இந்த வழக்கு குற்றவியல் சட்டம் பிரிவு 395/397 இன் படி விசாரிக்கப்படுகிறது.

“இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி முகமட் ஃபஸ்லான் ரெஸ்ஸா மஸ்லான் (011-10561017) அல்லது IPD Klang Utara (03-32912222) அல்லது அருகிலுள்ள ஏதேனும் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here