கணவர் காரை பின்னோக்கி எடுக்கும்போது மோதியதில் மனைவி பலியான துயரம்

கூலிம், தானாம் செலாசே என்ற இடத்தில் நேற்று தனது கணவர் காரை பின்னோக்கி எடுக்கும்போது எதிர்பாராதவிதமாக மனைவி மீது  மோதியதில் அவர் உயிரிழந்தார். இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்துள்ளார்.

கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் முகமட் ரெட்சுவான் சலே கூறுகையில், 60 வயதுடைய தம்பதியினர் இருவரும் புரோட்டான் சாகாவில் தங்கள் வீட்டை விட்டு வெளியேறவிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் தங்கள் வீட்டிற்குள் இருந்து எதையோ எடுக்க காரில் இருந்து வெளியேறினார். அவரது கணவர் தற்செயலாக ரிவர்ஸ் செய்யும் போது ஆக்ஸிலேட்டரில் மோதியதால் கார் அவர் மீது மோதியது என்று ரெட்சுவான் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு காரையும் புரோட்டான் சாகா மோதியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here