வெப்பநிலை அதிகரிப்பு : வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவீர் – கிளாந்தான் மாநில அரசு

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து, திறந்தவெளியில் பயிற்சி உள்ளிட்ட விளையாட்டு நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களை கிளாந்தான் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

“இது தொடர்பில் மாநில விளையாட்டு கவுன்சில், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு மேலாளர்களுடன் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்தியது, தற்போதைய வறட்சிக்கு தீர்வு காண, உட்புற பயிற்சிக்கான திட்டங்கள் உட்பட அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளை முடிந்தவரை கட்டுப்படுத்த விரும்புகிறோம். வெப்ப அலைத்தாக்கம் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால் மாநில அரசு விளையாட்டு மையங்கள் அல்லது மைதானங்களை மூடும் திட்டம் எதுவும் இல்லை என்று மாநில இளைஞர் மேம்பாடு, விளையாட்டு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் குழுத் தலைவர் வான் ரோஸ்லான் வான் ஹமாத், இன்று கிளாந்தான் PAS-இன் நோன்புப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் சந்தித்தபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here