கடந்த ஏப்ரல் 22 அன்று தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, ஆபத்தான சாகசம் செய்ததாக ஒரு தொழிலாளி மீது இன்று கோத்தா பாரு மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
மாவட்ட நிதிமன்ற நீதிபதி முஹமட் ஃபித்ரி மொக்தார் முன் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், 17 வயதான குற்றம் சாட்டப்பட்டவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
குற்றச்சாட்டின் அடிப்படையில், ஏப்ரல் 22 ஆம் தேதி மதியம் 12 மணியளவில், ஜாலான் கோத்தா பாரு-கோலா திரெங்கானுவில், குற்றம் சாட்டப்பட்டவர் ஹோண்டா C100B மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்தபோது, அவர் ஒரு “மோட்டார் சைக்கிள் சக்கரங்களை உயர்த்தி சாகசம் புரிந்தார் என்றும் இது ஆபத்தானது என்றும் கூறப்பட்டது.
அவருக்கு எதிராக சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) பிரிவு 42(1)ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஐந்தாண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனையும், RM5,000க்குக் குறையாமலும், RM15,000க்கு மிகாமல் அபராதமும் விதிக்கப்படலாம்.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு தனி நபர் உத்தரவாதத்துடன் RM900 ஜாமீன் வழங்க நீதிமன்றம் அனுமதித்தது மற்றும் வஹக்கை மீண்டும் செவிமடுக்க ஜூன் 20 ஆம் தேதியை நிர்ணயித்தது.
கோத்தா பாருவின் கம்போங் பெரிங்காட்டில் உள்ள ஜாலான் பாசீர் பூத்தே அருகே நடந்ததாக நம்பப்படும் “மோட்டார் சைக்கிள் சாகசம் ” தொடர்பான 28 நிமிட வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, திருமணமான தம்பதிகள் காவல்துறையினரால் தேடப்பட்டதாக ஊடகங்கள் முன்பு தெரிவித்தன.
ஏப்ரல் 27 அன்று போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவின் பிரிவு 42 இல் 17 மற்றும் 16 வயதுடைய கணவன் மற்றும் மனைவி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.