பினாங்கிலுள்ள பிரபல “ரொட்டி சானாய்” கடையில் சுகாதரக் குறைபாடு; 14 நாட்களுக்கு மூடுமாறு உத்தரவு

ஜார்ஜ் டவுன்:

பினாங்கின் ஜாலான்  டிரான்ஸ்ஃபரில் உள்ள பிரபலமான “ரொட்டி சானாய்” கடை சுகாதார அமைச்சகம் நிர்ணயித்த சுகாதார விதிமுறைகளை பின்பற்றத் தவறியதற்காக,  இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாநில வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, கிராமப்புற மற்றும் சுகாதாரக் குழுத் தலைவர் டாக்டர் நோர்லேலா அரிஃபின் தெரிவித்தார்.

இந்த முடல் அறிவிப்பு உணவுச் சட்டம் 1983 இன் பிரிவு 11 இன் படி, கடை உரிமையாளர் அவ்வளாகத்தில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் உணவகத்தில் வேலை செய்யும் உணவு நிர்வகிப்பு பயிற்சிக்கு அனுப்பத் தவறியதற்காக, சம்மந்தப்பட்ட உணவகத்தின் உரிமையாளருக்கு RM500 அபராதமும் விதிக்கப்பட்டது.

அத்தோடு கடையில் வைக்கப்பட்டிருந்த முட்டைகள் பழுதடைந்திருந்ததும் கண்டறியப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

குறித்த உணவுக்கடையின் பணியாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது, உணவுகளை கையாளுவது தொடர்பான 53 வினாடிகள் கொண்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அக்கடையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here