பூலாவ் தெங்கா அருகே ஆறு மணி நேரம் கடலில் தத்தளித்த 4 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

பூலாவ் தெங்கா அருகே மீனவர்களின் படகு சேதமடைந்ததால், கடலில் 6 மணி நேரம் தத்தளித்த நன்கு மீனவர்கள் மலேசிய கடல்சார் அமலாக்க துறையால் மீட்கப்பட்டனர்.

நேற்று சனிக்கிழமை (மே 6) இரவு சுமார் 9.45 மணியளவில், பூலாவ் தெங்காவிலிருந்து 1.6 கடல் மைல் தொலைவில் மீன்பிடி படகு சேதமடைந்ததாக தமது செயல்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்தது என்று,
சிலாங்கூர் MMEA கடல்சார் இயக்குனர் கேப்டன் வி. சிவகுமார் கூறினார்.

உடனே தாங்கள் ஒரு படகை அந்த இடத்திற்கு அனுப்பியதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் – அஸ்பியன் அபு பக்கர், 44, மற்றும் அவரது மகன் அர்ஃபான் ரபிக், 18, மற்றும் ஜம்ரி சே அனி, 45, மற்றும் அஹ்மட் அலி, 66 – ஆகியோர் பாதுகாப்பாகக் காணப்பட்டனர், மேலும் அவர்களை மீட்டு பூலாவ் இண்டாவில் உள்ள கடல்சார் போலீசாரின் படகுத்துறைக்கு கொண்டு வந்ததாக, இன்று ஞாயிற்றுக்கிழமை (மே 7) அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

மீன்பிடி ஆர்வலர்கள் தங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வை அதிகரிக்கவும், கடலில் செல்லும்போது லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்து சரியான நடவடிக்கை எடுக்கவும் சிவகுமார் நினைவூட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here