கோலாலம்பூர்: இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் இன்று மதியம் 12.24 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனேசியாவின் பண்டார் லாம்புங்கிற்கு தென்மேற்கே 171 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இருப்பினும், இந்த நிலநடுக்கம் மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று அது கூறியது.









