முதல் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ பிர்தௌஸ் முஹமட் ரோம் காலமானார்

முதல் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ பிர்தௌஸ் முஹமட் ரோம் ஹாருன் தனது 73வது வயதில் இன்று காலமானார்.

சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட முஹமட் ரோம், சிரம்பானின் தாமான் பரோய் ஜெயாவில் உள்ள அவர்களது குடும்ப வீட்டில் மதியம் 12.50 மணியளவில் உயிரிழந்ததாக அவரது மகன் முஹமட் ஃபாலிக் ஃபிர்தௌஸ் தெரிவித்தார்.

ஃபிர்தௌஸ் முஹமட் ரோம் 2004-2008 வரை ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதற்கு முன், அவர் 1995 முதல் 2004 வரை செம்பாங் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார், மேலும் 2008 முதல் 2010 வரை அப்போதைய மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசனின் அரசியல் செயலாளராகவும் இருந்தார் என்பது நினைவுகூறத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here