சுங்கை மூடா நீர்மட்டம் திடீரென குறைந்து வருவதால் பினாங்கின் சில பகுதிகளுக்கு மே 14 முதல் 17 வரை நீர் விநியோகத்தடை

சுங்கை மூடாவின் நீர்மட்டம் திடீரென குறைந்து வருவதால், பினாங்கு மாநிலத்தின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (மே 14) முதல் புதன்கிழமை (மே 17) வரை தண்ணீர் விநியோகம் தடைபடும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணியளவில், சுங்கை மூடாவில் உள்ள லஹர் தியாங் இன்டேக் இன்லேட்டில் உள்ள நீர்மட்டம் திடீரெனக் குறைந்ததால், சுங்கை துவா நீர் சுத்திகரிப்பு ஆலையில் (WTP) சுத்திகரிக்கப்பட்ட நீர் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்று, பினாங்கு நீர் வழங்கல் கழகம் (PBAPP) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“இதற்கு மாற்றீடாகவும் அவசரகால நடவடிக்கையாகவும் விரிவாக்கப்பட்ட மெங்குவாங் அணையிலிருந்து தண்ணீரை எடுக்கிறோம். இருப்பினும், அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு சுங்கை மூடாவிலிருந்து வரும் பற்றாக்குறையை ஈடுகட்ட போதுமானதாக இல்லை.

இருப்பினும் மாநிலத்தின் சில பகுதிகளில் உள்ள நுகர்வோர் புதன்கிழமை வரை குறைந்த நீர் அழுத்தத்தை அனுபவிப்பார்கள் என்று அது கூறியது.

“இன்னும் நீர் விநியோகம் உள்ள நுகர்வோர் இந்த காலக்கட்டத்தில் பயன்படுத்த தண்ணீரை சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் நுகர்வோர்கள் தங்கள் தோட்டத்திற்கோ செடிகளுக்கோ தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துமாறும், தண்ணீர் நுகர்வைக் குறைக்குமாறும், உங்கள் கார் அல்லது மோட்டார் சைக்கிளைக் கழுவ குழாய் நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் மாநில முதல்வர் சௌ கோன் யோவ் அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here