நிச்சயதார்த்த மோதிரம் வாங்கச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஆடவர் பலி – அவரின் வருங்கால மனைவி படுகாயம்

நேற்றிரவு கெர்தேவுக்கு அருகிலுள்ள ஜாலான் கோலா திரெங்கானு-குவாந்தானின் 105-வது கிலோமீட்டரில், ஏற்பட்ட சாலை பத்தில் சிக்கி ஒருவர் இறந்தார், அவரது வருங்கால மனைவி பலத்த காயமடைந்தார்.

இரவு 11 மணியளவில் நடந்த விபத்தில், கெமாமான், கம்போங் புக்கிட் குவாங் என்ற முகவரியில் உள்ள முஹமட் அலிஃப் ஹபிசுதீன் சம்சுல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரத்தில் 20 வயதான அவரது வருங்கால மனைவி மேல் சிகிச்சைக்காக கெமாமன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இதுகுறித்து கெமாமன் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் ஹன்யன் ரம்லான் கூறுகையில், சம்பவத்தின் போது, ​​பாதிக்கப்பட்ட இருவரும் கெர்தே திசையிலிருந்து டுங்கூன் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

டுங்கூன் திசையில் இருந்து கெமாமன் நோக்கிச் சென்ற பல்நோக்கு வாகனம் சாலைப் பிரிவைக் கடப்பதற்கு முன்பு கட்டுப்பாட்டை இழந்தபோது விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

மேலும் ​​பாதிக்கப்பட்டவர் கெமாமானில் நிச்சயதார்த்த மோதிரத்தை வாங்கிய பின்னர், தனது வருங்கால மனைவியை மீண்டும் டுங்கூனில் விடுவதற்கு சென்று கொண்டிருந்தார்.

“பாதிக்கப்பட்டவரின் உடல், அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர், மேலதிக விசாரணைக்காக கெமாமன் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

“இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41 (1) இன் படி விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here