பெர்சாத்து கட்சியின் அரசியலமைப்பின் 14.15 வது பிரிவின்படி, பிரிவு நிலை மற்றும் உச்ச மன்ற தேர்தல்கள் 18 மாதங்களுக்கு மிகாமல் ஒத்திவைக்கப்படும் என்று பெர்சாத்து கட்சியின் உச்ச மன்றம் தெரிவித்துள்ளது.
டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 12) நடைபெற்ற உச்ச மன்றக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த உடன்பாடு எட்டப்பட்டது என்று, அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறினார்.
“அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவுள்ள தேர்தல்களை எதிர்கொள்ள பெர்சாத்து முழுமையாக தயாராக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
அத்தோடு எதிர்வரும் மே 21 அன்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை சிலாங்கூர் மாநில இளைஞர் மற்றும் கலாச்சார வளாகம், பிரிவு 7, ஷா ஆலம், ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெறும் பெரிகாத்தான் நேஷனல் கட்சியின் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொள்ளுமாறு அனைத்து பொதுமக்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.








