தற்போதைய வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து, இதுவரை இரு பள்ளி மாணவர்கள் மற்றும் சுயதொழில் செய்து வரும் பெண் ஆகியோரை உள்ளடக்கிய மூன்று வெப்பத்தாக்கப் பாதிப்பு சம்பவங்களை சபா பதிவு செய்துள்ளது.
இதில் முதல் சம்பவம் ஏப்ரல் 15 முதல் கடந்த வெள்ளிக்கிழமை (மே 12) வரை இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சபா மாநில சுகாதாரத் துறை இயக்குநர், டத்தோ டாக்டர் ரோஸ் நானி முடின் தெரிவித்தார்.
முதல் வழக்கு 18 வயது ஆண் மாணவர், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி வார்டில் அனுமதிக்கப்பட்டார், மூன்று நாட்களின் பின்னர் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
“இரண்டாவது வழக்கில், 9 வயது ஆண் மாணவர் கடந்த ஏப்ரல் 30 அன்று வார்டில் அனுமதிக்கப்பட்டார் மற்றும் மே 2 அன்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார்.
“மூன்றாவது வழக்கு 27 வயதான பெண், அவர் சுயதொழில் செய்து வருபவர் ஏப்ரல் 29 அன்று வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார்.
“மூன்று நோயாளிகளும் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்துள்ளனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.