ரஷ்யாவின் ஆன்மிக ஒற்றுமைக்கான விருத்தை பெற்றார் மாட் சாபு

ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபுவுக்கு ஆன்மிக ஒற்றுமைக்கான பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

“நேற்று செவ்வாய்க்கிழமை (மே 16) மாஸ்கோவில் உள்ள கிராண்ட் கதீட்ரல் மசூதியில், ரஷ்ய முஸ்லிம் ஆன்மிக வாரியத்தின் தலைவரான ரஷ்யாவின் மூத்த முஃப்தி ரவில் கெய்னுடின் இந்த பதக்கத்தை வழங்கினார்” என்று மாட் சாபு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, உம்மாவின் ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளில், குறிப்பாக விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் மலேசியா மற்றும் ரஷ்யா இடையே இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் ஹலால் தொழிற்துறையில் சாத்தியமான ஒத்துழைப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்,மே 15 முதல் 23 வரை ரஷ்யாவிற்கு தனது அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள டத்தோஸ்ரீ முகமட் சாபு, இந்த பயணத்தின்போது 14 வது அனைத்துலக பொருளாதார மன்றமான “Russia-Islamic World: Kazan Forum 2023” இல் விவசாயம் மற்றும் உணவுத் துறையில் மலேசியாவின் பார்வையைப் பகிர்ந்து கொள்வார் என்று, விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சகம் முன்னதாக வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here