பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராமில் வெற்றி பெற்ற சுஹைசான், நஸ்ரி ஆகியோருக்கு பிரதமர் வாழ்த்து

கோலாலம்பூர்:

நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில் பூலாய் நாடாளுமன்றம் மற்றும் சிம்பாங் ஜெராம் மாநிலத் தொகுதிகளில் வெற்றி பெற்று, தக்கவைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் சுஹைசான் கயாத் மற்றும் நஸ்ரி அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வாழ்த்து தெரிவித்தார்.

PH தலைவரான அன்வார், நாட்டை அபிவிருத்தி செய்வதில் ஒற்றுமை அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரித்த மற்றும் நம்பிய அனைத்து வாக்காளர்களுக்கும் தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்தார்.

நேற்று அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதில், இந்த தேர்தல் முடிவு ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஒரு சாதகமான வளர்ச்சியாகும்.

#MalaysiaMADANI என்ற ஹேஷ்டேக்குடன் அந்த வாழ்த்துப் பதிவை முடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here