மாநில தேர்தல்: பெரிக்காத்தான் கூட்டணிகளுக்கு இடையினான இட ஒதுக்கீடு 95 விழுக்காடு நிறைவு – தகியுடின்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 6 மாநில தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான இடங்களை ஒதுக்கும் செயல்முறை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பாஸ் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தகியுடின் ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பரில் 15வது பொதுத் தேர்தலுக்கு PN மேற்றுக்கொண்ட அதே செயல்முறையை, கிளாந்தான் மற்றும் திரெங்கானுவில் PAS இன் பிறைச் சந்திரன் சின்னத்தின் கீழ் போட்டியிடுவதும், பினாங்கு, கெடா, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் PN லோகோவையும் பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

“மேலும் PN ஐ பொறுத்தவரை, கூறு கட்சிகளுக்கு இடையேயான இடப் பங்கீடு 95 சதவீதம் தீர்க்கப்பட்டுவிட்டது என்றே கூறலாம், மேலும் இந்த கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தீர்மானிக்க வேண்டும் என்பதே பாக்கி.

“நிச்சயமாக அந்தந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களை சீக்கிரம் தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாகவும்” அவர் இன்று நடந்த நோன்புபுப்பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்டு, செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here