டுங்குன், கிழக்கு பந்தாய் நெடுஞ்சாலை (LPT) 2 இன் கிலோமீட்டர் 375 இல் அஜில், புக்கிட் பீசி அருகே இன்று அதிகாலை ஒரு சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் Tan Poh Hwa, 42 வயதான ஒரு பெண் பயணியும் 44 வயதான Choo Chia Tan ஒரு ஆண் பயணியும் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
தெரெங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) படி, அவர்கள் அதிகாலை 5.16 மணிக்கு ஒரு அழைப்பைப் பெற்றனர் மற்றும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர். 30 பயணிகளுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிர் பாதையில் மோதி விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது.
காயமடைந்த நிலையில் இருந்த பாதிக்கப்பட்டவர்கள் EMRS (அவசர சிகிச்சை மீட்பு சேவை குழு) மற்றும் ஒரு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் இறந்தவர்களின் உடல் மேலதிக நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், டுங்குன் மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் பஹாருதீன் அப்துல்லாவைத் தொடர்பு கொண்டபோது, சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.