சமூக ஊடகங்களில் மாட்சிமை தங்கிய பேரரசரை அவமதித்ததற்காக மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக் கடைக்காரர் ஒருவருக்கு, கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் மீண்டும் அதேபோன்ற குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டார்.
மாண்புமிகு பேரரசர் மற்றும் பேரரசியார் ஆகியோருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அவருக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
இதற்கு 40 வயதான ஷரில் முகமட் சரிஃப் என்பவர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
முன்னதாக, எந்தவொரு வக்கீலாலும் பிரதிநிதித்துவம் செய்யப்படாத குற்றவாளி, கெடாவில் உள்ள சுங்கை பட்டாணி மருத்துவமனையில் தனக்கு மனநல சிகிச்சை அளிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
“நான் மருந்து உட்கொண்டிருக்கிறேன் மற்றும் மனநல பிரச்சனைகளால் அவதிப்படுகிறேன்,” என்று அவர் கூறினார்.
நீதிபதி என். பிரிசில்லா ஹேமமாலினி, ஷரிலை மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்த பேராக்கில் உள்ள பஹாகியா உலு கிந்தா மருத்துவமனைக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார்.
பின்னர் மனநல அறிக்கையை ஜூன் 16 ஆம் தேதி குறிப்பிட நீதிமன்றம் நிர்ணயித்தது.














