RM150,000க்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா வைத்திருந்த ஒரு பெண் உட்பட மூவர் கைது

தைப்பிங்கின் கமுண்டிங்கில் உள்ள கம்போங் பாயாவில் 48,446 கிலோகிராம் எடையுள்ள சுமார் 150,000 ரிங்கிட்க்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா என நம்பப்படும் போதைப்பொருளை வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை நடத்திய தொடர் சோதனையில், அனைத்து போதை மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார்.

இதன்படி 35 முதல் 39 வயதுடைய இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட அனைத்து போதைப்பொருள்களும் RM153,260 மதிப்புடையது என மதிப்பிடப்பட்டுள்ளது, அத்தோடு அவர்களிடமிருந்து RM67,670 மதிப்புள்ள மூன்று வாகனங்கள் மற்றும் ஒரு செயினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அனைத்து சந்தேக நபர்களும் போதைப்பொருளுக்கு எதிர்மறையானவர்கள் மற்றும் கடந்தகால குற்றவியல் பதிவுகள் இல்லாதவர்கள் என்று கூறிய அவர், இவ்வழக்கு ADB 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரிக்கப்பட்டது என்றும் அனைத்து சந்தேக நபர்களும் விசாரணைக்கு உதவ மே 18 முதல் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here