கார் விற்பனை செய்வதாகக் கூறி மோசடி; ஆடவர் ஒருவருக்கு RM90,000 இழப்பு

கடந்த மே 12 அன்று, கார் விற்பனை முகவரிடமிருந்து 90,000 ரிங்கிட் பணத்தை இழந்த உள்ளூர் நபர் ஒருவருக்கு இந்த அனுபவம் மிக திகிலானதாக இருந்தது.

பாதிக்கப்பட்ட 36 வயதான நபர், ஹோண்டா எச்ஆர்வி வகைக் காரை விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பாக ஒருவரை அணுகினார் என்று, பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அமிஹிசாம் அப்துல் ஷுகோர் கூறினார்.

சந்தேக நபர் ஜாலான் டமான்சாராவில் உள்ள முன்னணி கார் நிறுவனத்தில் பணிபுரிந்த உள்ளூர் நபர் என்றும், கடந்த ஜனவரி 9 அன்று, பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரிடம் RM500 செலுத்தி முன்பதிவு செய்தார், மேலும் ஏப்ரல் 29 முதல் மே 4 வரை கட்டம் கட்டமாக பணம் நிறுவனத்திடம் செலுத்தப்பட்டது. அதாவது புகார்தாரர், சந்தேக நபர் கொடுத்த நிறுவனத்தின் கணக்கு எண்ணுக்கு ரொக்கப் பணம் மற்றும் ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்தார்.

“இருப்பினும், மே 11 அன்று, புகார்தாரருக்கு குறித்த வாகன காட்சியாகத்தின் மேலாளரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, அதில் அவர் இன்னும் முன்பணம் பெறவில்லை என்று அவருக்குத் தெரிவித்தார்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் தான் சந்தேக நபர் கொடுத்த கணக்கிற்கு பணம் வைப்பிலிட்டதாக கூறியபோது, குறித்த நபர் தற்போது அந்த நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்றும் கூறினார்.

மோசடி மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்குவதற்காக குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மோசடி செய்பவர்களின் அனைத்து மோசடி தந்திரங்களுடனும் கவனமாக இருக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here