பிரத்யேக “FF9” என்ற வாகன பதிவு எண் தொடருக்கான வெறித்தனமான ஏலத்தின் மூலம், தொழிலதிபர் ஐவான் வோங் வலைத்தளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
“அப்படியென்றால் இந்த அழகான பெண் RM909,999-க்கு FF9 என்ற நம்பர் பிளேட்டை வாங்கினாரா ??” என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எவ்வாறாயினும், 35 வயதான வோங், இந்த பதிவெண்ணை RM911,999 க்கு ஏலம் கேட்ட பின், அவரை விட RM2,000 அதிகமாக கேட்டு மற்றோருவர் அதனை RM909,999 வாங்கியதால் அவரால் குறித்த நம்பர் பிளேட்டைப் பெற முடியவில்லையாம்.
“நான் ஏன் நம்பர் பிளேட்டை ஏலம் எடுத்தேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்,” FF9 நம்பர் பிளேட், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன தனது அன்பான செல்லப்பிராணியான Fei Fei ஐ நினைவில் கொள்வதற்கான ஒரு வழியாக அது எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ” என்று அவர் இன்ஸ்டாக்கிராமிலுள்ள @lovedevon99 என்ற கணக்கில் இவ்வாறு கூறினார்.
மேலும், தன்னிடம் மெக்லாரன் 720எஸ் மற்றும் மெர்சிடிஸ் ஆகிய இரண்டு கார்களின் நம்பர் பிளேட்டில் “9” என்ற எண் இருப்பதாலும் தான் அடந்த பதிவெண்ணை விரும்பியதாக அவர் கூறினார்.
FF9 நம்பர் பிளேட்டை அவரால் பெற முடியவில்லை என்றாலும், அதை நினைத்து வருத்தப்படவில்லை என்றும் வோங் கூறினார்.
மேலும் மன ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனது சமூக தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறினார்.









