கோலாலம்பூர்: மலேசியா எவரெஸ்ட் 2023 (ME2023) மலையேறுபவர் லெப்டினன்ட் கர்னல் அவாங் அஸ்கந்தர் அம்புவான் யாக்கோப்பின் உடல் நாளை காலை 6.25 மணிக்கு (மலேசிய நேரம்) கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை (KLIA) வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கெடா சிவில் பாதுகாப்புப் படை (ஏபிஎம்) இயக்குநரின் உடல் நேபாளத்தின் காட்மாண்டுவில் இருந்து MH115 விமானம் மூலம் இரவு 11.30 மணிக்கு (காத்மாண்டு நேரப்படி) கொண்டு வரப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்தார்.
உடல் பின்னர் MH2646 விமானம் மூலம் காலை 11.35 மணிக்கு (மே 27) கோட்டா கினாபாலுவுக்கு கொண்டு செல்லப்படும். மேலும் பிற்பகல் 2.15 மணிக்கு கோட்டா கினபாலு சர்வதேச விமான நிலையத்திற்கு (KKIA) வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அவரது குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு, அவாங் அஸ்கங்கரின் உடல்கம்போங் பெனோனி, பாபரில் உள்ள அவரது குடும்ப வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் இறுதிச் சடங்குகளுக்காக அஸ் சலாம் பெனோனி மசூதிக்கு கொண்டு செல்லப்படும்.
அவரது அஸ்தி கம்போங் பெனோனி முஸ்லிம் கல்லறையில் அடக்கம் செய்யப்படும் மற்றும் அடக்கத்தின் போது முழு APM மரியாதை வழங்கப்படும். அறிக்கையின்படி, அவாங் இஸ்கந்தரின் உடலைக் கொண்டுவருவதற்கான அனைத்து நடைமுறைகள் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் நேபாளத்தில் உள்ள மலேசியத் தூதரகம் செய்தது.
56 வயதான அவாங் அஸ்கந்தர், 8,000 மீட்டர் உயரத்தில் ஏறும் போது கீழே விழுந்ததாகவும், முகாம் 4இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இறந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. எவரெஸ்ட் மலையின் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டர் உயரத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
விபத்தின் போது, அவாங் இஸ்கந்தர் 8,000 மீட்டர் உயரத்தில் சக ஏறுபவர் முஹம்மது ஹவாரி ஹாஷிம் (33) உடன் இருந்தார். மேலும் சிகரத்தை அடைய 20 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.










