மலேசியாவின் இலக்கவியல் வருகை அட்டையைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை

பெட்டாலிங் ஜெயா:

வெளிநாட்டினருக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மலேசியா இலக்கவியல் வருகை அட்டையை (MDAC) பயன்படுத்துவதில் எந்த சிரமமும் இல்லை என்று வெளிநாட்டுப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமையன்று தனது கணவருடன் மலேசியாவிற்கு பயணித்த இந்திய நாட்டவரான ருக்கு (67), கூறும்போது, மலேசியாவிற்கான தனது இந்தப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததாகவும், விமானத்தில் ஏறும் முன் MDAC பாரங்களை நிரப்ப அவர்களின் மருமகன் உதவியதாகவும், வேறு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

“நாங்கள் வந்ததும், என் கணவர் எங்களின் ரிட்டர்ன் டிக்கெட்டுகள் மற்றும் பிற ஆவணங்களைக் காட்டினார், நாங்கள் உள்ளே நுழைய அனுமதி பெற்றோம். இதற்கு அதிக நேரம் எடுக்கவில்லை, ”என்றார் ருக்கு.

கடந்த டிசம்பர் 1 முதல், நாட்டிற்குள் நுழையும் வெளிநாட்டினர் அவர்கள் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக MDAC க்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு மூன்று பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது: முதலாவது குடியேற்ற அனுமதி பெறாமல் சிங்கப்பூர் வழியாகப் போக்குவரத்து அல்லது இடமாற்றம் வழியில் பயணிக்கும் பயணிகள்; இரண்டாவது வகை மலேசிய நிரந்தர குடியிருப்பாளர்கள்; மூன்றாவது MACS அட்டை வைத்திருப்பவர்கள் ஆகியோர் 3 நாட்களுக்கு முன் MDAC க்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க தேவையில்லை.

இருப்பினும், திடீர் அவசர காலங்களில் பயணம் செய்ய வேண்டியவர்கள் மற்றும் மூன்று நாள் தேவையை பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கான பயண செயல்முறை குறித்து, பின்னர் குடிவரவுத் திணைக்களத்தை தொடர்பு கொண்ட போது, இந்த விடயம் குறித்து அறிக்கை வெளியிடுவதாகக் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here