முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இசா சமாட் மீண்டும் அம்னோவில் இணைந்தார்

முன்னாள் நெக்ரி செம்பிலான் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் இசா அப்துல் சமாட் மீண்டும் அம்னோவில் இணைந்தார்.

அவர் அம்னோவில் இணைவதற்கான விண்ணப்பத்தை கட்சியின் உச்ச மன்றம் அங்கீகரித்ததாக டத்தோ டாக்டர் அசிரஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை (மே 26) கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த முடிவு எட்டப்பட்டதாக அம்னோ பொதுச் செயலாளரான அவர், “நள்ளிரவில் கூட்டம் முடிந்ததன் காரணமாக, நான் இன்னும் உறுதிப்படுத்தல் கடிதத்தை அனுப்பவில்லை,” என்று அவர் கூறினார்.

போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு எதிராக அம்னோ முடிவு செய்ததால், கட்சியின் முன்னாள் துணைத் தலைவரான முகமட் இசா, செப்டம்பர் 2018 இல் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here