சட்டவிரோத வர்த்தக நோக்கத்திற்காக பல்வேறு வகையான பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை மறைத்து வைக்க, வாத்து பண்ணையை பயன்படுத்திய ஆடவரின் குட்டு வெளிப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை ஜோகூர் பாருவில் உள்ள தாமான் டாயாவில் ஒரு வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற அமலாக்க அதிகாரிகள், வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் விளைவாக பாதுகாக்கப்பட்ட இனமாக சந்தேகிக்கப்படும் இரண்டு கழுகுகள் அடங்கிய பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று, தீபகற்ப மலேசியாவின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் திணைக்களத்தின் பணிப்பாளர், ஜெனரல் டத்தோ அப்துல் காதிர் அபு ஹாஷிம் கூறினார்.
மேலும் அருகிலுள்ள வாத்து பண்ணையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, 13 கழுகுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவரது கூற்றுப்படி, அனைத்து பறவைகளும் செல்லுபடியாகும் உரிமம் அல்லது அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக வைக்கப்பட்டு, மற்றும் விற்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
“40 வயதுடைய சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக வடக்கு ஜோகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு (IPD) அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பருந்துகளும் RM110,000 மதிப்புடையதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவை மேல் நடவடிக்கைக்காக ஜோகூர் மாநில புலனாய்வு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.








