மலேசியர்கள் வாரத்தில் கிட்டத்தட்ட 20 மணிநேரம் சமூக ஊடகங்களில் செலவிடுகிறார்கள் -அறிக்கை

மலேசியர்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டது, தோராயமாக 26.8 மில்லியன் பயனர்கள் இணையத்தில் ஒரு நாளில் இரண்டு மணி நேரம் 47 நிமிடங்களை அல்லது வாரத்தில் கிட்டத்தட்ட 20 மணிநேரம் செலவிடுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான மீடியா மற்றும் சமூக ஊடகத் தகவல்களில் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வில், உலகளாவிய ரீதியாக முன்னணியில் உள்ள மெல்ட்வாட்டரால் (Meltwater) வெளியிடப்பட்ட “2023 டிஜிட்டல் ஆண்டு அறிக்கையில்” இருந்து இந்த தரவுகள் பெறப்பட்டுள்ளன.

25 முதல் 34 வயதுக்கு இடைப்பட்ட பயனர்கள் ஆன்லைனில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதாக அறிக்கை கண்டறிந்துள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் இணைய பயனர்கள் உலாவுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன, அவை தகவல் தேடுதல் (76.2 சதவீதம்), தற்போதைய செய்திகளைஅறிந்து வைத்திருத்தல் (65.8 சதவீதம்) மற்றும் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பைப் பேணுதல் (64.2 சதவீதம்) என்பதாகும்.

மேலும், வாட்ஸ்அப் 89.3 விழுக்காட்டினர், பேஸ்புக் 84.8 விழுக்காட்டினர் மற்றும் இன்ஸ்டாகிராம் 74.3 விழுக்காட்டினறாலும் பயன்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் டிக்டோக் மலேசியர்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே பிரபலமடைந்து வருகிறது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் 44 மில்லியனுக்கும் அதிகமான மொபைல் இணைப்புகளை அதிகரித்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றது, இது முந்தைய ஆண்டை விட 1.2 மில்லியன் அல்லது 2.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, வணிக அம்சங்கள் மற்றும் பலவற்றிற்காக அனைதது மலேசியர்களும் செல்லுலார் நெட்வொர்க்கிற்கான அணுகலைக் கொண்டுள்ளனர்.

“நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு குடிமக்கள் தங்கள் மொபைல் போன்கள் மூலம் ஆன்லைனில் பொருட்களை வாங்குகிறார்கள் என்பது மிகவும் தெளிவாக உள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.

ப்ராக்ஸி சப்ளை ப்ராக்ஸிராக் நடத்திய ஆய்வில், வியோன் நியூஸ் அறிக்கையின்படி, உலகில் பெரும்பாலான சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் மலேசியா இரண்டாவது இடத்தில் உள்ளது என்றும், மலேசியர்கள் சராசரியாக எட்டு சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் செலவழிப்பதன் மூலம் தென்னாப்பிரிக்கா சமூக ஊடகப் பயன்பாட்டில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து பிரேசில் (ஒன்பது மணி 14 நிமிடங்கள்) மற்றும் தாய்லாந்து (9 மணி 6 நிமிடங்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here