இறைச்சி வெட்டும் கத்தியால் கணவனை வெட்டியதாக நம்பப்படும் மனைவி கைது

கோத்தா பாருவிலுள்ள பெங்கலான் சேப்பாவில் உள்ள வீட்டில், தனது கணவரின் வலது கையை இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டியதாக நம்பப்படும் பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை காவல்துறைக்கு அளித்த புகாரினடிப்படையில், 30 வயதுடைய அப்பெண் நேற்று மாலை 3 மணியளவில் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று, கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் முகமட் ரோஸ்டி தாவுட் கூறினார்.

குடும்பச் சண்டை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்தேக நபர் அவ்வாறு நடந்துகொண்டதாக நம்பப்படுகிறது.

மேலும் குற்றவியல் சட்டம் பிரிவு 326ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது அத்தோடு சந்தேக நபர் நேற்று முதல் ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here