ஜெரான்தூட், பத்து எம்புனில் உள்ள பகாங் ஆற்றில் மூழ்கி, இரண்டு பதின்மவயது சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்கள் முகமட் சஃப்வான் ஜம்ரி மற்றும் முகமட் ஹனாஃபி ரோம்சி என்ற 13 வயதுடைய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி சுல்ஃபாடில் ஜகாரியன் தெரிவித்தார்.
“இன்று பிற்பகல் 3.07 மணிக்கு, குறித்த சம்பவம் தொடர்பில் அழைப்பு வந்ததாகவும், ஆனாலும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டனர்.
“அவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.