இந்தாண்டு இதுவரை திரெங்கானுவில் 26 மலேரியா சம்பவங்கள் பதிவு

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் திரெங்கானுவில் மொத்தம் 26 மலேரியா நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்த எண்ணிக்கையில், 22 வழக்குகள் ஜூனோடிக் மலேரியா நோய் என்றும் ஏனைய நான்கு வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடமிருந்து பதிவானவை என்று, திரெங்கானு மாநில சுகாதாரத் துறை இயக்குநர், டத்தோ டாக்டர். காசெமணி எம்போங் கூறினார்.

அவரது கூற்றுப்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 100 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 13 மலேரியா சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இருப்பினும், இதுவரை, மாநிலத்தில் மலேரியாவால் இறப்பு சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் கூறினார்.

இதில் குரங்குகள் போன்ற விலங்குகளிடமிருந்து பரவும் ‘பிளாஸ்மோடியம் நோலெசி’ என்ற ஒட்டுண்ணியால் ஏற்படும் ஜூனோடிக் மலேரியா தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கும் போக்கைக் காட்டுகிறது என்று, இன்று Pengkalan Gawi, Tasik Kenyir என்ற இடத்தில் நடைபெற்ற “திரெங்கானு மாநில அளவிலான உலக மலேரியா தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு”, அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எனவே கொசுக்கடியில் இருந்து உடலை முழுவதுமாக பாதுகாக்கும் வகையில் ஆடைகளை அணிவது, கொசு மருந்து அடிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் நிச்சயம் பின்பற்றவேண்டும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here